Vijay : விஜய்யின் கடைசி படம் தான் ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக படப்பிடிப்பு முமரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் உரிமையை ஜனநாயகன் படம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. அதுவும் பல கோடி கொடுத்து காப்புரிமை வாங்கியதாக கூறப்பட்டது.
அப்படி என்றால் பகவான் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் எதற்காக ஜனநாயகன் படக்குழு பகவந்த் கேசரி படத்தின் உரிமையை வாங்கி உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
பகவந்த் கேசரி படத்தின் உரிமையை வாங்கிய ஜனநாயகன்
அதாவது அந்த படத்தில் இடம் பெற்ற குட் டச் மற்றும் பேட் டச் காட்சியை ஜனநாயகன் படத்தில் உருவாக்கி இருக்கின்றனராம். இதற்காகத்தான் மொத்த படத்தின் உரிமையையும் நாலரை கோடி கொடுத்து ஜனநாயகன் படம் வாங்கி இருக்கிறதாம்.
பின்பு எந்த பிரச்சனையும் படத்திற்கு வரக்கூடாது என்பதற்காக படக்குழு இவ்வாறு செய்துள்ளது. மற்றபடி மொத்த படத்தையும் ரீமேக் செய்யவில்லை என்று படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆகையால் தற்போது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்று பரவிய வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகன் டீசர் விஜய்யின் பிறந்தநாள் ஆன ஜூன் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.