அஜித் ரசிகர்களின் 2 ஆண்டு எதிர்பார்ப்பாக வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. வலிமை திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.
வலிமை படத்தின் புகைப்படம் எதுவும் வெளிவராத ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
மோஷன் போஸ்டர்கள் இத்திரைப்படத்தில் அஜித் வித்தியாசமான கெட்டப்பில் தெரிகிறார் படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் பைக் ரேஸ் போன்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டால் வலிமை என்பதற்கு பதிலாக வலமை என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்து கொந்தளித்த அஜீத் ரசிகர்கள் படத்தின் பெயரை சரியாக பார்த்து போடுங்கள் வலிமைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதா என்று கொந்தளித்தனர்.