2024 January 11 & 12 OTT Release Movies : 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் பெரிய படங்கள் எல்லாம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் வெளியாகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படமும் இப்போது வெளியாக இருக்கிறது. அந்த வகையில் ஓடிடிலும் இந்த வாரம் நிறைய படங்கள் வெளியாகிறது. தமிழில் ஆஹா ஓடிடித் தளத்தில் செவப்பி படம் ஜனவரி 11 வெளியாகிறது.
மேலும் யோகிதா, அடா சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஜீ 5 ஓடிடி தளத்தில் 12ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்குகளிலேயே இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி வசூலை நெருங்கியது.
அதேபோல் ஜர்னி என்ற படம் சோனி லைவ் தளத்தில் ஒளிபரப்பாகிறது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜனவரி 12 வெளியாகிறது. மேலும் சமீபத்தில் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் அனிமல் என்ற படம் வெளியாகி இருந்தது.
இந்த படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 15 வெளியாகிறது. இது தவிர மிஷன் இம்பாசிபிள் 7 அமேசான் பிரைமிலும், கோடபொம்மலி பிஎஸ் ஆஹா ஓடிடியில் 11ஆம் தேதி வெளியாகிறது. மேலும் கில்லர் சூப் என்ற வெத்தொடர் நெட்பிளிக்ஸில் ஜனவரி 11 வெளியாகிறது.