Sharukhan In Jawan Movie: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து கொடுத்திருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் தனியார் கல்லூரியில் மிகப் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி, ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் மாசாக என்ட்ரி கொடுத்து பல கைதட்டலுடன் அரங்கத்திற்குள் நுழைந்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். பின்பு விஜய் சேதுபதியை பார்த்ததும் கட்டி அணைத்து கொண்டார். அத்துடன் அனிருத்-க்கு முத்தம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் மேடையில் அவருடைய உரையாடலை தொடங்கி இருக்கிறார்.
அதாவது என்னுடைய படத்திற்கு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே இல்லை. மேலும் நான் ஆரம்ப காலத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு என்னுடைய நண்பர் கமலின் ஹேராம் படத்தில் நடித்தேன். அத்துடன் ரஜினிகாந்துடன் ரா ஒன் படத்திலும் நடித்திருக்கிறேன்.
தற்போது பல வருடங்களுக்குப் பின் மறுபடியும் தமிழ் சினிமாவில் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் நடன இயக்குனர் சோபியிடம் எனக்கு ரஜினி மற்றும் விஜய் மாதிரியெல்லாம் ஆடத் தெரியாது என்று சொல்லி அங்கு இருந்த ரசிகர்களை குதூகலப்படுத்துகிறார் ஷாருக்கான்.
சும்மாவே ரஜினி, விஜய் பெயர் என்றால் மேடையே அதிரும். இதுல வேற ஷாருக்கான் எனக்கு அவர்களைப் போல ஆடத் தெரியாது என்று ரசிகர்களிடம் சொல்லியதால் ஜவான் மேடையே வேற லெவல்ல தெறித்து விட்டது. இதெல்லாம் ரசிகர்களின் கவனம் ஜவான் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக ஷாருக்கான் பயன்படுத்திக் கொண்ட தந்திரம் தான் என்று தெரிகிறது.