ஜெயலலிதா அவர்களை, அம்மா, புரட்சித்தலைவி மற்றும் அயன் லேடி என்று இவரை அன்போடு அழைப்பார்கள். இவரின் கம்பீரமான குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் இவர் “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என்ற வாசகத்தை சொல்லும்போதெல்லாம் நமக்கு மெய்சிலிர்க்க வைத்திருப்பார். இவரை மாதிரி அரசியலில் ஆளுமை செய்வதற்கு யாராலயும் முடியாது என்ற சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் பேச்சு கம்பீரமாக இருக்கும்.
அதிலும் இவர் பேசும் ஆங்கிலம் வெள்ளைக்காரர்கள் கூட பேச முடியாதாம் அந்த அளவிற்கு ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். இவர் “தாய்” என்ற நாவலை தமிழில் வார வாரம் நாளிதிற்கு எழுதி வந்திருக்கிறார். பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார். ஒருமுறை கன்னடக்காரர்களிடம் நான் தமிழச்சி என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர்கள் கன்னடத்தில் சேர்ந்தவர்கள் என்பதால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்பொழுது அங்கிருந்த எல்லாரும் ஜெயலலிதாவை மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இவர் நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என் அம்மா ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் என்று எல்லாருக்கும் சாட்டையடியாக பதில் கொடுத்திருக்கிறார். இப்படி யாரிடமும் தலை வணங்காத “அயன் லேடி” என்று பெயர் எடுத்தவர். அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிகையாக மக்களிடம் பிரபலமானவர்.
மேலும் இவர் மூன்று வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்டவர். பின்பு கல்லூரி முடித்த பிறகு மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்தார். இவருடைய மிகப்பெரிய கனவாக இருந்தது வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான். ஆனால் இவரது தாயார் சினிமாவில் நடிப்பதற்கு வற்புறுத்தி இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். பின்பு தாயார் தூண்டுதலால் திரைத்துறைக்கு வலுக்கட்டாயமாக நடிக்க வந்தார்.
இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடித்து இருக்கிறார். இவர் நடித்து வாங்கிய முதல் சம்பளம் 3000 ரூபாய். பின்பு சிவாஜி, எம்ஜிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகச் சிறந்த நடிகையாக பெயர் பெற்றார்.
அடுத்து நடிகையாக ஆன பிறகு சோபன் பாபு மீது தீராத காதல் இவருக்கு ஏற்பட்டது. அதுவும் சோபன்பாபுவை இவரது பைனாகுலர் மூலம் இவரது வீட்டில் இருந்து பார்ப்பாராம். அந்த அளவிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின்பு சில காரணங்களால் அந்த காதல் நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் திருமண வாழ்க்கையை விரும்பாத இவர் தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு 28 வயது ஆன சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அந்த மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்திவைத்தார். இதன் மூலம் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்தார்.