ஜெயம் ரவிக்காக அண்ணன் செய்த செயல்..பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாற வேண்டுமென தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த முதல் படத்திலிருந்து தோள் கொடுத்து நிற்கும் அவருடைய அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தம்பியை கதாநாயகனாக வைத்தே 6 படத்தை  இயக்கி, அதில் 5 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

அதிலும் இவர்களது கூட்டணியில் வெளியான அந்த ஐந்து ஹிட் படங்களாக ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் பிடித்தமான படங்களை லிஸ்டில் உள்ளது.

ஜெயம் ரவி இவ்வளவு தூரம் சினிமாவில் உயர்வதற்கு தன்னுடைய அண்ணன் தான் காரணம் என்ற சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். தன்னை பொருத்தவரை சினிமாவில் வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்கள் மட்டும் பண்ண வேண்டும்.

அதற்காக எவ்வளவு நாட்கள் ஆனாலும் காத்திருக்கலாம் என்று தன்னுடைய அப்பா சொன்ன வேதவாக்கை தற்போது வரை கடைபிடித்து கொண்டிருக்கிறாராம் ஜெயம் ரவி. அதனால் தான் சினிமாவில் நுழைந்த 20 ஆண்டுகளில் வெறும் 25 படங்களில் மட்டுமே நடிக்க முடிந்ததாம்.

இப்படி படங்களைத் தேர்வு செய்து நிதானமாக நடிப்பதனால் தான், அவர் நடித்த படங்களில் தோல்வி படங்கள் மிகக் குறைவாக இருக்கிறது என்று பெருமையுடன் பேசினார் ஜெயம் ரவி. மேலும் தனது அண்ணன் மோகன் ராஜா உடன் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக துடி துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மோகன் ராஜா அதற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாவதால், ஜெயம் ரவிக்கு நிச்சயம் இந்த படத்தின் மூலம் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஜெயம் ரவி தனது அண்ணனுடன் இணைந்து தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது.