ஜெயம் ரவி படங்கள் சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் தனது முத்திரையை பதித்துள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வண்ணம் உள்ளது.
அதாவது வருஷத்திற்கு குறைந்தபட்சம் 10 படங்களாவது விஜய் சேதுபதி நடித்துவிடுவார். அவரது இடத்திற்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜெயம் ரவி வந்துள்ளார். இப்போது இவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளது. இவ்வாறு ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் ஜெயம் ரவி பிசியாக உள்ளார்.
அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படம் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் மாதம் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சைரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காமெடியான படங்களை இயக்கும் ராஜேஷ் ஜெயம் ரவியின் 30வது படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்ததாக அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கன மன படம் வருகின்ற ஜூலை மாதம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது. மேலும் இதே இயக்குனருடன் இறைவன் என்ற படத்தில் ஜெயம் ரவி கூட்டணி போட்டு உள்ளார். இவ்வாறு இந்த வருடம் முழுக்க ஜெயம் ரவியின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் சுந்தர் சி யின் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் கடைசியாக ஜெயம் ரவியின் 32 ஆவது படம் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகிறது. இப்படம் ஜெயம் ராஜாவின் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.