Jayam Ravi : சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்தி அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிய போவதாக சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் தகவல் வெளியானது.
இது பொய்யாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது நினைப்பு பொய்யாகும் படி இப்போது ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் வாழ்க்கையில் பல்வேறு அத்தியாயங்களை கொண்ட பயணம், ஒவ்வொன்றும் பல சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உடன் வருகிறது.
15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஜெயம் ரவி

பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர், சமூக ஊடக நண்பர்கள் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாக மற்றும் வெளிப்படையாக இருக்க முயற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஜெயம் ரவி பதிவிட்டிருக்கிறார்.
ஆர்த்தி உடனான உறவை முறித்துக் கொண்ட ஜெயம் ரவி

அதுவும் இந்த முடிவை நீண்ட கால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு எடுத்துள்ளதாக கூறியிருந்தார். அதாவது ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இரண்டு விவாகரத்து பெற முடிவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். மேலும் இவர்களது பிரிவுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
தனுஷ் ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் சைந்தவி என தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்த நிலையில் இப்போது ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தியும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.