தரமான ஹிட் கொடுத்து 5 வருஷம் ஆச்சு.. வெற்றிக்காக பூஜை போட்டு காத்திருக்கும் ஜெயம் ரவி

Actor Jayam Ravi: ஜெயம் ரவி ஒரு தரமான வெற்றி படத்தை கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அண்மை காலமாகவே அவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதில் பொன்னியின் செல்வன் இவருக்கான ஒரு அடையாளமாக இருக்கிறது.

ஆனால் அப்படத்தின் வெற்றிக்கு இவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதன்படி ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த பூமி வந்து சுவடு தெரியாமல் போனது.

அதே போன்று தான் அகிலன், இறைவன் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஒரு தரமான வெற்றியை கொடுக்க வேண்டும் என ஜெயம் ரவி வெறித்தனமாக நடித்திருக்கும் படம் தான் சைரன்.

Also read: ரஜினிக்கு பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆன ஜெயம் ரவி.. 2 தோல்வியால் துவண்டு போன துருவன்

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி மேல் கொலை பழி விழுவதும், அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க கீர்த்தி சுரேஷ் முயற்சிப்பதும் என ட்ரெய்லர் விறுவிறுப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகளும் ஜோராக நடந்து வருகிறது.

மேலும் ஜெயம் ரவியும் இந்த படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடவுளுக்கு பூஜை செய்து வேண்டுதல் வைத்து வருகிறாராம். அவருடைய நம்பிக்கையை சைரன் காப்பாற்றுமா? பாக்ஸ் ஆபிஸை கலக்குமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை..! மணிரத்தினத்திடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜெயம் ரவி