12 வருடங்களாக தமிழ் சினிமா மறந்த விஜய் பட நடிகர்.. பழைய ஐயப்பன் படங்கள் என்றால் இவர்தான்

தமிழ் திரையுலகில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் சில நடிகர்கள் ஆழமாகப் பதிந்துள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவர்களை திரையில் காண முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களைப் பற்றி எந்த தகவலும் வெளியாவதில்லை.

அப்படி தமிழ் சினிமாவில் கதாநாயகன், குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் ராஜீவ். இவர் பழைய சுவாமி படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் நடித்து அசத்த கூடியவர்.

ரயில் பயணங்கள் படத்தில் கொடுமையான கணவர் கதாபாத்திரத்தில் ராஜீவ் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தந்தையாக நடித்து இருந்தார். பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து அதிக பாராட்டுகளைப் பெற்றார்.

கடைசியாக ராஜு சிவப்பு மழை என்ற படத்தில் கடந்த 2010ல் நடித்திருந்தார். அதன் பிறகு இவரை திரைப்படங்களில் காணமுடியவில்லை. தோற்றம் மாறாமல் அப்படியே இருக்கும் ராஜீவ் படத்தில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் ராஜீவ் பெற்றோரின் இறப்புக்குப் பின்பு திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். பின்பு நண்பர்களின் வற்புறுத்தலால் ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனா காமாட்சி என்ற மகளும், கிரன் சூர்யா என்ற மகனும் உள்ளார்.

தற்போது ராஜுவின் வயது முதிர்வு காரணமாக அவரது குழந்தைகள் இவரை ஓய்வெடுக்க சொல்லியுள்ளனர். இதனால் ராஜீவ் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி உள்ளார். ஆனால் இவர், அப்பா மற்றும் குடும்ப கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.