கதை கேட்காமலேயே ஓகே சொல்லும் ஜெயம் ரவி.. உண்மை தெரியாமல் ஊர் சுற்றுவதால் நடந்த விபரீதம்

தனுசுக்கு எப்படி செல்வராகவனோ, அதே போல் ஜெயம் ரவியும் சினிமாவில் நுழைவதற்கு அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்குனராக இருந்து தோள் கொடுத்து தூக்கி விட்டார். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம்,  M. குமரன் S/O மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இதனால் அவருக்கு பிற இயக்குனர்களிடமும் பணி புரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அண்ணனுடைய படங்கள் ஓடிய அளவிற்கு மாற்ற படங்கள் ஓடாமல் படுதோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால் இப்போது வரை வளரும் நடிகராகவே தமிழ் சினிமாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இவருடைய 25 ஆவது படமான பூமி படமும் படு தோல்வி அடைந்தது. இப்போது பல வருடங்களாக காக்க வைத்த ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழிவர்மன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

இதனால் இவருடைய மார்க்கெட் எகிறும் என்று நினைத்தார். அதன் காரணமாகவே அகிலன் படத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு திரையிட வேண்டும் என்று கால தாமதமாக ரிலீஸ் செய்தார். இருப்பினும் அவர் போட்டு வைத்த கணக்கெல்லாம் வீணாய் போனது. ஏனென்றால் அகிலன் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், அவர் நடித்த பூமி படத்தை விட மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

அகிலன் வெளியான ஒரு வாரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் ஒரு சில திரையரங்கத்தை தவிர அனைத்து தியேட்டர்களிலும் பார்க்க ஆளில்லாமல், கடமைக்கு வைத்து ஓட்டி வருகிறார்கள். எதற்காக ஜெயம் ரவிக்கு மட்டும் இப்படி நடக்கிறது. கதை கேட்டு படத்தை நடிக்க ஒப்புக்கொள்வாரா! இல்லை யார் கதை சொன்னாலும் நடிக்க கிளம்பி விடுவாரா என்ற சந்தேகம் எழுகிறது.

உண்மை தெரிந்தும், அகிலன்படம் வெளியான உடனே என்ன ரிசல்ட் என்று கூட கேட்காமல், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்று விட்டார். இவருடைய இந்த ஆட்டிட்யூட்டை பார்த்த பிரபலங்கள் பலரும் ஜெயம் ரவிக்கு இனி பட வாய்ப்பு கிடைப்பது அரிது தான் என்று விமர்சிக்கின்றனர். இனிமேல் படத்தில் நடிப்பதை விட அவருடைய அப்பாவை போல் படங்களை தயாரிக்க வேண்டியதுதான்.