கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. வரலாற்று கதையம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது.
இதில் ஜெயம் ரவி சோழ மன்னன் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதனால் இந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எவரும் என பலரும் கணித்தனர். ஆனால் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வனுக்கு அப்புறம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
ஏற்கனவே அவர் இரண்டு படங்கள் நடித்துக் கொண்டு இருந்தார். அந்தப் படங்களின் ரிலீசுக்கு தற்போது பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் ஒரு படம் முழுவதுமாக முடிந்து விட்டது பிசினஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இன்னொரு படம் கொரோனா நேரத்தில் ஆரம்பித்தார் அதுவும் பாதியோடு நிற்கிறது.
இயக்குனர் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி-நயன்தாரா ஜோடி முன்னதாக இணைந்திருந்த தனி ஒருவன் படமும் சூப்பர் ஹிட் கொடுத்த படமாகும்.
அதனால் இறைவன் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த ஜெயம் ரவிக்கு அந்தப் படம் பெரும் அடியை தந்திருக்கிறது. ஏனென்றால் இறைவன் படம் முடிந்து விட்டது பிசினஸ் ஆகவில்லை. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த “ஜன கன மன” என்ற ஒரு படம் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.
அந்த படத்தில் ஏகப்பட்ட ஆர்டிஸ்ட்கள் நடித்தார்கள் இந்த படம் நின்ற உடனே அவர்கள் வேறுபடத்தில் கமிட் ஆகி விட்டார்கள். திரும்ப அனைவரும் வரவேண்டும் அதனால் இந்த படமும் சிக்கலில் இருக்கிறது. இப்படி ஜெயம் ரவிக்கு கெட்ட நேரம் சுத்தி சுத்தி அடிக்கிறது என்று புலம்புகிறார்.