இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

Actor Jayam Ravi: கடந்த சில தோல்விகளை பார்த்து வந்த ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் அந்தஸ்தை கொடுத்து விட்டது. அதனாலேயே தற்போது அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன. அதில் நயன்தாராவுடன் அவர் இணைந்து நடித்திருக்கும் இறைவன் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.

அஹமத் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றிருக்கிறது. அங்கு படத்தை பார்த்த அவர்கள் அரண்டு போய் விட்டார்களாம். அந்த அளவுக்கு படம் படும மிரட்டலாக இருந்திருக்கிறது. இருப்பினும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் சென்சார் போர்டு இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் முதல் முறையாக ஜெயம் ரவியின் படம் இப்படி ஒரு சான்றிதழை பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் ரத்தம் தெறிக்கும் சில காட்சிகள் இருப்பதால் சென்சார் அதிகாரிகள் இரண்டு இடங்களில் வெட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படியாக ரணகளமாக நம்மை மிரள விட காத்திருக்கிறது இந்த இறைவன். அது மட்டுமல்லாமல் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வை கொடுக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்குப் போட்டியாக மற்றொரு த்ரில்லர் படமான சந்திரமுகி 2வும் வெளிவர இருக்கிறது. இப்படி ரசிகர்களை மாறி மாறி மிரட்ட வரும் இந்த இரண்டு படங்களில் எது அதிக கவனம் ஈர்க்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.