8 வருடங்களுக்குப் பின் ஜெயம் ரவியை தூக்கிவிட வரும் ஹீரோயின்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த போஸ்டர்

என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இறைவன். ஜெயம் ரவி சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவரது கேரியரை சற்று தூக்கி விட்டுள்ளது.

இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் கைவசம் எக்கசக்க படங்கள் இருக்கிறது. மேலும் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

வெற்றிக் கூட்டணியான ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் தனி ஒருவன் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் இறைவன் படத்தில் கூட்டணி போட்டுள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த சூழலில் இன்று மாலை படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி ரிலீஸ் தேதியுடன் இறைவன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது நான்கு மொழிகளில் இறைவன் படம் வெளியாகிறது.

மேலும் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி இறைவன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த போஸ்டரில் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி நடுவில் ரத்தக் கரையுடன் ஒரு கத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரச் செய்யும் அளவிற்கு திரில்லர் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் ஜெயிலர் படமும் வெளியாக இருக்கிறது. சில நடிகர்களின் படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் இறைவன் படத்திற்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தடைகளை உடைத்து ஜெயம் ரவி வசூல் வேட்டையாடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

iraivan
iraivan