எதிர்நீச்சல் 2 வீட்டுக்குள் புகுந்த கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி விஷப்பாம்பு போல் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். சாமியார் வேடமிட்டு பக்திமான் போல் வந்தவர், ஓவர் அட்டூழியம் செய்து வருகிறார். குணசேகரனுக்காக உளவாளி வேலை செய்து கொண்டு வலம் வருகிறார்.
ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மூவரையும் ரகசியமாக கண்காணிக்கிறார் ஜான்சி. அப்படி ஜன்னலில் இருந்து எட்டிப் பார்க்கும்போது தாரா விளையாட்டாக செய்த விஷயத்தை குணசேகரனிடம் பற்ற வைக்கிறார். கரெக்டா குணசேகரன் ஊதும் மகுடிக்கு ஆட்டம் போடுகிறார் ஜான்சி.
தாரா பாப்பா மணிவிழா நடக்குமா நடக்காதா என்பதை மதுரை மீனாட்சி அம்மன் முன்னாள் சீட்டு குலுக்கி போடுகிறார். ரேணுகா எடுத்த அந்த சீட்டில் மணிவிழா நடக்காது என்று தான் வந்துள்ளது. இதை மறைமுகமாக ஜான்சி ராணி பார்த்து குணசேகரனிடம் மொத்தத்தையும் விஷமாய் தட்டுகிறார்
ஜான்சிராணிக்கும் பிடி கொடுக்காமல் குணசேகரன் நாடகம் ஆடுகிறார். எல்லோருக்கும் இதில் விருப்பம்தான் நீ vதேவையில்லாமல் பேச வேண்டாம் என்று ஜான்சி ராணியை அடக்கி வைக்கிறார். மேலும் ஜான்சி எப்படிப்பட்டவர் என்பதும் குணசேகரனுக்கு தெரியும். அவரிடம் பெரிதாக காட்டிக் கொள்வதில்லை.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஜனனியின் தந்தை நாச்சியப்பனை சக்தி மணி விழாவிற்கு அழைத்ததை கேள்விப்பட்ட ஜனனி ஆக்ரோசமாய் பொங்கி எழுகிறார். யாரை கேட்டு எங்கள் அப்பாவை அழைத்தீர்கள் என இருவருக்கும் சண்டை வந்தது. இப்படி இந்த மணிவிழா எல்லா சூழ்ச்சிகளையும் தாங்கி வருகிறது.