ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Jio Hotstar: முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு தளங்களும் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறி உள்ளது.

இதன் மூலம் பார்வையாளர்களுக்கு என்ன சலுகைகள் இருக்கிறது என்பதை காண்போம். இந்த இரண்டு தளங்களிலும் இருந்த நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை நாம் இனி ஒரே தளத்தில் பார்க்க முடியும்.

என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

அதுவும் இலவசமாக கண்டு களிக்க முடியும். ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்கள் வரும். விளம்பரம் இல்லாமல் எளிதாக பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் பணம் செலுத்தி பார்க்கலாம்.

ஏற்கனவே பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்திருப்பவர்கள் அப்படியே தொடரலாம். அந்த வேலிடிட்டி முடியும் வரை அந்த பிளான் தொடரும்.

அதேபோல் புது சந்தாதாரர்களுக்கு 149 முதல் பல பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் செயலியை வைத்திருப்பவர்கள் அதை அப்டேட் செய்தால் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment