பாக்ஸ் ஆபிஸுக்கு வழிவிட்ட ஹாட் ஸ்டார்.. பட்டையை கிளப்பும் 2 படங்கள்

Jio Hotstar : சமீபகாலமாக ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகும் பெரிய படங்கள் புஷ் என்ற போய்விடுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல் வரும் நல்ல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த வருடம் தமிழில் இரண்டு மூன்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகி விடும். படத்தின் ரிலீஸுக்கு முன்பே டிஜிட்டல் உரிமை விற்கப்படுவதால் இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு விடும்.

ஆகையால் ரசிகர்கள் பலர் படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டு ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று தியேட்டரை தவிர்ப்பதும் உண்டு. ஆனால் இப்போது தியேட்டரில் இரண்டு படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுக்கு ஆஃபர் கொடுத்த ஜியோ ஹாட் ஸ்டார்

அதனால் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் அந்த படங்களின் ஸ்ட்ரீமிங்கை தள்ளி வைத்துள்ளது. அதாவது சசிகுமார் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி மே ஒன்றாம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படம் மே 28ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருந்தது.

அதேபோல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஏப்ரல் 25ஆம் தேதி துடரும் படம் வெளியாகி இருந்தது. இப்படம் மே 21 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்ய இருந்தனர். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்று ஹவுஸ்புல்லா சென்று கொண்டிருக்கின்றது.

ஆகையால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஐ அணுகி தியேட்டரில் நல்ல வசூல் செய்து வருகிறது. ஆகையால் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் ஜியோ ஹாட்ஸ்டார் ஜூன் முதல் வாரத்தில் இந்த படங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். ஆகையால் பாக்ஸ் ஆபிஸில் துடரும் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் பெரிய கலெக்ஷன் செய்து வசூல் சாதனை படைக்க உள்ளது.