கோலிவுட்டில் ‘ஜேஜே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் அமோகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் இந்த எல்லா மொழிகளிலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மேலும் ‘ஜேஜே’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக தோன்றிய அமோகா, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் கிளாமராக நடனம் ஆடி இருந்தார். இதனைப் பார்த்த அமோகாவின் ரசிகர்கள் பலர் மெர்சல் ஆகிவிட்டனர். ஏனென்றால், அந்தப் பாட்டிற்கு மிகவும் கவர்ச்சியாக ஆடியிருப்பார் அமோகா.
அதற்குப் பிறகு இவர் கோலிவுட்டில் எந்த ஒரு திரைப்படத்திலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமோகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
அதாவது அமோகாவிற்கு தற்போது 37 வயதாகிறது. மேலும் 2 படங்களில் தோன்றியதற்கு பின் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன அமோகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அப்போது கட்டான உடலமைப்பை கொண்டிருந்த அமோகா, தற்போது வெளிநாட்டு வெள்ளை பூனைபோல் புசுபுசுவென மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், அமோகாவின் அழகு குறைந்து போனதை எண்ணி நொறுங்கிப்போய் உள்ளனர்.