எதிர்நீச்சல் 2 குணசேகரன் பரோலில் வெளிவந்ததிலிருந்து ஜனனிக்கு அடிக்கடி ஆபத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. முதல் முறை மாடியிலிருந்து பூந்தொட்டி விழுந்து பயம் காட்டியது. மறுபக்கம் பாத்ரூம் ஹீட்டர் தீ பற்றி எரிந்தது.
இப்படி தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்றதை கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டர் குந்தவை அவரின் பரோலை கேன்சல் செய்வதற்காக அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக காவல்துறை குணசேகரனை அழைத்து நீதிபதியிடம் ஒப்படைத்தது.
அவரும் பரோலை கேன்சல் செய்யும் நேரத்தில், வீட்டு மருமகள் அனைவரும் வந்து குணசேகரனுக்கு சாதகமாக பேசுகிறார்கள். இவர் வெளியில் இருப்பதால் எங்களுக்கு ஆபத்து வருகிறது, மிரட்டுகிறார். ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என தைரியமாக கூறுகிறார்கள்.
இதனால் குணசேகரன் பரோலை ஜட்ஜ் கேன்சல் செய்யாமல் நீட்டிப்பு கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் நீதிபதி, குணசேகரனுக்கு ஒரு முரட்டு அட்வைஸும் செய்கிறார். உங்கள் வீட்டுப் பெண்கள் தான் உங்களை காப்பாற்றுகிறார்கள்.
அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அதைப் புரிந்து அவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறுகிறார். பழையபடி வீட்டிற்கு அந்த குணசேகரன் ஜட்ஜ் கொடுத்த அறிவுரையால் அவமானப்பட்டு கல்லுளி மங்கன் போல் அங்கும் இங்கும் சுற்றுகிறார்.