July 4 Theatre Release Movies : ஜூன் மாதம் கடைசி வாரம் விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் மற்றும் விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா படங்கள் வெளியானது. இந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் என்னென்ன படங்கள் தியேட்டரில் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
சித்தார்த், சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 3BHK படம் வெளியாக இருக்கிறது. சொந்த வீடு கட்ட நினைக்கும் நடுத்தர குடும்பத்தை பற்றிய படம் தான். இதற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
அடுத்ததாக அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அஃகேனம் படம் உருவாகி இருக்கிறது. துணிச்சலான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வரும் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜூலை நான்காம் தேதி வெளியாகும் 7 படங்கள்
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது பறந்து போ படம். மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பெற்றோர்களுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் படம் உருவாகி இருக்கிறது.
அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. சுந்தர் கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கின்ற அனுக்ரஹன் படமும் ஜூலை 4 திரைக்கு வர உள்ளது.
அடுத்ததாக தெலுங்கில் நிதின் நடிப்பில் உருவான தம்முடு மற்றும் நவீன் சந்திரா, காமாக்ஷி பாஸ்கர்லா ஆகியோர் நடிப்பில் உருவான ஷோ டைம் படங்கள் வெளியாகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான உப்பு கப்பரம்பு என்ற தெலுங்கு படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.