Actor Suriya: தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சூர்யா- ஜோதிகா இருவரும் இப்போது வரை எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் தங்களது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்கின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் துணிச்சலுடன் முடிவெடுத்து இருப்பது தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சூர்யா இப்போது பாலிவுட்டில் முதல் முதலாக என்ட்ரி கொடுக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பிரபல ஹிந்தி இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கப் போகிறார். மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவிற்கு தற்போது கங்குவா படமும் சுதா கொங்கரா இயக்கும் படமும் கைவசம் இருப்பதால் இந்த படங்களை முடித்து விட்டு உடனடியாக பாலிவுட் படத்தில் கர்ணனாக நடிக்க தயாராக போகிறார்.
சூர்யாவின் மனைவியான ஜோதிகா மும்பையைச் சேர்ந்தவர். இவர் முதலில் இந்தி படங்களில் நடித்து அதன் பிறகு கடந்த 1998 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, வெகு சீக்கிரமே கோலிவுட்டின் டாப் நடிகையாக மாறினார். அதன்பின் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பை துவங்கினார்.
அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா, தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 25 வருடங்களுக்கு பின்பு மறுபடியும் ஜோதிகா பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
அந்த படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் ஜோதிகா தான் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தை குயில் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இயக்குகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் ஹிந்தியில் கணவன் மனைவியாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்தே பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுப்பது ரொம்பவே தில்லானா விஷயம் தான்.
முன்பு ஜோதிகாவிற்கு ஹிந்தியில் வாய்ப்பு வந்ததும் வழி அனுப்பி வைத்த சூர்யா, சைடு கேப்பில் தனக்கு வந்த வாய்ப்பையும் கப்புன்னு பிடித்துக் கொண்டார். இவ்வளவு நாள் ஜோதிகா தமிழ்நாட்டு மருமகளாக இருந்தார். இப்போது சூர்யா மும்பை மருமகனாக வாழப் போகிறார். சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாவது சந்தோஷம்தான், ஆனால் அங்கேயே இருந்து விடக்கூடாது என்பதுதான் தமிழ் ரசிகர்களின் வேண்டுகோள்.