அவங்கள பார்த்தாலே நடிப்பே மறந்து விடும்.. மேடையில் சிலிர்த்து போய் பேசிய விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் வரவேற்பை பெறாவிட்டாலும் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இந்த படத்தின் பிரமோஷனில் படு பிஸியாக இருக்கும் விக்ரம் அனைத்து சேனலுக்கும் பிசியாக பேட்டி கொடுத்து வருகிறார். அதிலும் சோழர்கள் பற்றி இவர் கூறும் செய்திகள் அனைத்தும் பிரபலங்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் இவருடைய கலகலப்பான பேச்சும் பட ப்ரமோஷனுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் ஐஸ்வர்யா ராய் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து விக்ரம் ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அதில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து தற்போது நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை.

இதைப் பற்றி குறிப்பிட்ட விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்று வாழ்வது மிகவும் கஷ்டம் என்று கூறியுள்ளார். மிகப்பெரிய குடும்பத்து மருமகளாகவும், பிரபல நடிகையாகவும் இருக்கும் அவர் தன் குழந்தை, கணவர், குடும்பம் என்று பிசி வேலைகளிலும் நடிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடிக்க ஆரம்பித்து விட்டாலே அனைவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருப்போம். அதிலும் அவர் நடனம் ஆட ஆரம்பித்து விட்டால் நான் என்னை மறந்து பார்த்துக் கொண்டே இருப்பேன்.

அதன் பிறகு ஆக்சன் என்று சொன்னால் எனக்கு என்னுடைய நடிப்பே மறந்து விடும். அந்த அளவுக்கு அவருடைய பர்பாமன்ஸ் சிறப்பாக இருக்கும் என்று அவர் சிலிர்த்து போய் கூறியிருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.