ரெட்ரோ விழாவில் சிவக்குமார் குடும்பத்தோடு ஆஜர்.. ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங், என்னவா இருக்கும்.?

Retro: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ மே 1 திரைக்கு வருகிறது. அதை முன்னிட்டு நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் பட குழுவினர் உட்பட சூர்யா சிவகுமார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் கார்த்தியின் மகள் தங்கை பிருந்தா ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆனால் ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங். இத்தனைக்கும் இப்படத்தை தயாரித்திருப்பது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான்.

ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங்

சூர்யா ஜோதிகா இருவரும் தான் அதன் தயாரிப்பாளர்கள். அப்படி இருக்கும்போது ஜோ வராதது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக கங்குவா பட விழாவிற்கு கூட அவர் வரவில்லை. தற்போதும் அவர் வராதது எரியுற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது.

ஏற்கனவே சிவக்குமாருடன் அவருக்கு கருத்து வேறுபாடு. அதனால் தான் மும்பைக்கு சென்றார் என்ற பேச்சு இருக்கிறது. அதற்கு ஜோதிகா மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆனாலும் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் பிரச்சனை இருப்பது உண்மைதானோ என தோன்றுகிறது. இதை ஏற்கனவே திரையுலகில் சிலரும் சத்தம் இல்லாமல் கிசு கிசுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.