மிடில் கிளாஸ் வாழ்க்கையை கண்முன் காட்டிய மெட்ராஸ் மேட்னி.. படு அசத்தலாக வந்த ட்ரெய்லர்

Kaali Venkat : சமீபகாலமாக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்கள் தோல்வியை தழுவுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்போது அந்த வரிசையில் தான் மெட்ராஸ் மேட்னி இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்படுகிறது. ஏனென்றால் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வைத்துள்ளது. காளி வெங்கட் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரோஷினி ஹரிப்பிரியா போன்றோர் நடித்திருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரோஷினி. இவர் இப்போது வெள்ளி திரையில் பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்னி ட்ரைலர் விமர்சனம்

அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இப்படத்தை இயக்கியுள்ளார். அதாவது மிடில் கிளாஸ் வாழ்க்கையில் சுவாரஸ்யம் மற்றும் சந்தோஷம் ஆகியவை எதில் இருக்கிறது என்பதை இப்படம் காட்டி இருக்கிறது.

சத்யராஜ் மிடில் கிளாஸ் குடும்பத்தில் சந்தோஷம், திரில்லர் என எதுவுமே இல்லை என்று கூறுகிறார். ஆனால் காளி வெங்கட் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதின் பிரதிபலிப்பாக இந்த படம் அமைந்திருக்கிறது.

ஜூன் 6-ம் தேதி இந்தப் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து உள்ளது. மேலும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.