தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வெற்றி பெற்ற பல படங்களை ரீமேக் செய்து பலரும் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் பில்லா, தில்லு முல்லு போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
சமீபகாலமாக ஓடிடி தளங்களின் வரவு அதிகமாக இருப்பதால் இயக்குனர்கள் பலரும் அதற்காகவே படம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். தியேட்டரில் இசைக்காக வெயிட் செய்யவேண்டியதில்லை என்ற ஒரு காரணத்தால் இஷ்டத்திற்கு படங்களை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் சுமாரான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கண்ணன், காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி அதை பிரத்தியேகமாக ஓடிடி தளத்திற்காக உருவாக்கி வருகிறார்.
மேலும் இந்த படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். காமெடியில் கலக்கும் மிர்ச்சி சிவா இந்த படத்திற்கு மிகச் சரியான தேர்வுதான் எனவும் கூறுகின்றனர். முத்துராமன் கேரக்டரில் மிர்ச்சி சிவா, தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்க உள்ளார்களாம்.
மேலும் மனோரமா கதாபாத்திரத்தில் ஊர்வசியை ஒப்பந்தம் செய்துள்ளனர். 49 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை சேட்டை படத்தை இயக்கி ஆர் கண்ணன் இயக்கி வருகிறார்.
இவர்தான் மலையாளத்தில் சமீபத்தில் வெற்றி பெற்ற த கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து உருவாக்கி வருகிறார். மேலும் இந்த படங்களில் எல்லாம் சொந்தமாக தயாரித்து நல்ல லாபம் பார்த்து வருகிறாராம் கண்ணன்.
