என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் கெட்ட சகவாசம் ஒரு மனிதனை ஓவர் நைட்டில் கீழே இறக்கி விடும். அதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். ஆரம்பத்தில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து திறமையானவர் என்று பெயரெடுத்த அந்த நடிகர் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் முடங்கி கிடக்கிறார்.
எதார்த்தமான பேச்சு, நடிப்பு என பக்கா கிராமத்து மனிதராக நமக்கு அறிமுகமான விமல் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார். ஆனால் அவர் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய குடிப்பழக்கம் போதை மருந்து பழக்கத்தின் காரணமாக இன்று கிடைத்த வாய்ப்புகளையும் நழுவ விட்டு இருக்கிறார்.
இடையில் சில மாதங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு விலங்கு என்ற வெப் தொடர் நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்தது. ஆனால் இப்படி தன்னை நோக்கி வரும் வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாராம். இது அவருடைய உடல் நிலையை பாதிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.
கடந்த மாதம் அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக விமலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த விமல் ஓரிரு நாட்களிலேயே வீடு திரும்பி இருக்கிறார். தற்போது வீட்டிலேயே அவருக்கு ரகசியமாக சிகிச்சை தொடர்ந்து வருகிறதாம். இந்த விஷயம் தற்போது மீடியாவில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் விமல் தனக்கு சாதாரண உடல்நல பிரச்சனை தான் என்றும் மாரடைப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் பில் காப்பி ஒன்று இப்போது இணையதளத்தில் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கும் மேல் கிடப்பில் கிடக்கிறதாம். அதை எப்படியாவது முடித்து வெளியிட வேண்டும் என்று காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் விமல் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
அதனால் எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என நினைத்த விமல் இப்போது குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் குடிபோதையால் பெயரையும், சினிமா வாய்ப்பையும் கெடுத்துக் கொண்ட எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த லிஸ்டில் விமல் பெயரும் சேர்ந்து விடுமா என்ற கலக்கத்தில் தற்போது ரசிகர்கள் இருக்கின்றனர்.