இப்படியும் ஒரு மனுஷனா, மொத்த கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த கமல்.. இந்த வயசுல இவ்வளவு படங்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல் முன்பை விட இப்போது சினிமாவுக்காக அதிக நேரத்தை ஒதுக்க உள்ளார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ராஜ்கமல் உடன் மணிரத்தினம் சேர்ந்த தயாரிக்கிறார்.

மேலும் கமல், லோகேஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான விக்ரம் படம் வசூல் வேட்டையாடியது. இதுவரை இப்படி ஒரு படத்தை தமிழ் சினிமா பார்த்ததில்லை. இந்த படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தான் கமல் தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை கமல் மீண்டும் சினிமாவில் போட ஆசைப்படுகிறார்.

அதுமட்டுமின்றி கமல் விக்ரம் படத்தில் பணியாற்றும்போது லோகேஷ் மற்றும் அவரை சுற்றியுள்ள நபர்களை பார்க்கும்போது இப்போது உள்ள இளைய சமுதாயம் மிகவும் வித்தியாசமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக இயக்குனர் மணிரத்தினம் கூறியுள்ளார்.

அதனால்தான் விக்ரம் படத்தின் கதையில் எந்த தலையிடுமே நான் செய்யவில்லை என்று கமல் கூறி உள்ளாராம். அந்தப் படத்தில் நடித்ததை தவிர நான் வேறு எதுவுமே செய்யவில்லை. ஆகையால் இந்த திறமையான நபர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என இளைஞர்களின் படத்தை தயாரிக்க கமல் முன்வந்துள்ளார்.

இப்போது ராஜ்கமல் நிறுவனம் கிட்டத்தட்ட 8 படங்களை தயாரிக்க உள்ளதாம். இந்த வயதில் மொத்த கோலிவுட்டையே கமல் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு எனர்ஜி என்று எல்லோரும் வியந்து பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு சுற்றி சுற்றி வேலை செய்து வருகிறாராம். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை கமல் தயாரிக்கிறார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்றவர்களிடம் கதையை கேட்டு வருகிறாராம். இப்படி கமலின் லயனப்பில் எக்கச்சக்க படங்கள் வரவுள்ளது. பொதுவாக சினிமாவில் போட்ட பணத்தை எடுத்து விட வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் கமல் எல்லாத்தையும் போல இதுலயும் வித்யாசமாக சினிமாவில் கிடைத்த பணத்தை சினிமாவுக்கு தான் பயன்படுத்துவேன் என்று உறுதியாக உள்ளார்.