ஆபரேஷன் சிந்துரால் தள்ளிப்போன சினிமா நிகழ்ச்சிகள்.. தக்லைஃப்பான நேரத்தில் ஆண்டவர் மறுத்த சம்பவம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கிறது. இருநாட்டு எல்லைகளிலும் ஜவான்கள் நாட்டிற்காக சண்டையிட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் நமது நிகழ்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைக்கலாம் என கமல் தக்லைஃப் நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளார்.

நேரு ஸ்டேடியத்தில் மே 16ஆம் தேதி தக்லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க இருந்தது. இப்பொழுது கமல் இந்த நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். நாடு பதற்றத்தில் இருக்கும் பொழுது இப்படி ஒரு நிகழ்ச்சி வேண்டாம் என அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுத்திவிட்டாராம்.

வருகிற ஜூன் 5ஆம் தேதி தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை செய்து வந்தனர். இதை விட்டால் சரியான நேரம் கிடைக்காது என அந்த தேதியை தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் அதற்கும் இப்பொழுது முட்டுக்கட்டை வந்துவிட்டது

கமல் எப்பொழுதும் தேசப்பற்று மிக்க மனிதராக இருப்பவர். பல மேடை விழாக்களில் நாட்டின் முன்னேற்றத்திற்கு, பகுத்தறிவாளராக பேசி எழுச்சி ஊட்டக்கூடியவர். இப்பொழுது கமல் இந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்ததை பல பேர் பாராட்டி வருகிறார்கள்.

அதை போல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்திற்கான சக்சஸ் மீட் இன்று நடைபெறவிருந்தது ஆனால் அதையும் வேண்டாம் என்று ஒத்தி வைத்து விட்டார்கள்.