Kanguva Bobby deol First Look poster: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திரிஷா பதானி நடிக்கிறார். இதில் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த கவனத்தை ஈர்த்த நடிகர் பாபி தியோல் உதிரன் என்ற முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
இன்று பாபி தியோலின் பிறந்தநாள் என்பதால் கங்குவா பட குழு உதிரனின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் பாபி தியோல் மிரட்டும் லுக்கில் இருக்கிறார்.
பல பெண்கள் சூழ்ந்து நின்று உதிரனை தெய்வமாக தொட்டு வணங்குவது போல், அந்த போஸ்டர் உள்ளது. ஏற்கனவே இரட்டை வேடத்தில் சூர்யா, கங்குவா படத்தில் நடிக்கிறார். அவருடைய லுக் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
அதே போல் இப்போது சூர்யாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் கங்குவா படத்தில் உதிரன் கேரக்டரில் நடிக்கும் பாபி தியோலின் கெட்டப் இருக்கிறது. இந்த உதிரன் போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவுகிறது.
மேலும் கங்குவா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை 38 மொழிகளில், ஐமேக்ஸ் மற்றும் 3டி முறையில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் சூர்யா மட்டுமல்ல இந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்குமே மறக்க முடியாத படமாக கங்குவா இருக்கப் போகிறது.
கங்குவா படத்தின் உதிரன் போஸ்டர்
