கங்குவா எதிரொலி, ரூட்டை மாற்றிய சூர்யா.. கையில் எடுத்த அஸ்திரம் கைகொடுக்குமா?

கங்குவா படத்துக்குப் பின் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 45. ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்குகிறார்.

ஆறு படத்துக்குப் பின் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். லப்பர் பந்து நடிகை சுவாசிகா முக்கிய ரோலில் நடிக்கிறார். 24 படத்துக்குப் பின் சூர்யா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பொள்ளாச்சியில் பூஜை போடப்பட்டது. கோவையில் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.இப்படம் ஆக்சன் படமாக உருவாகி வருவதாக கூறப்பட்டது. இதில், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த மாதிரி வக்கீல் கெட்டப்பில் சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகிறது.

சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வீரமிக்க திறமையான வக்கீலாக சூர்யா நடித்துள்ளாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கங்குவா படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. எனவே ஜெய்பீம் சாயலில் சென்டிமெண்டுக்காக சூர்யா, இதில் வக்கீல் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

படம் ஜெயிக்க இயக்குனருக்கு கண்டிசன் போட்ட சூர்யா!

கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் தியேட்டரில் வெற்றி பெறவில்லை. சூர்யா 45 படம் அந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிகிறது.

அதற்காக ஆர்.ஜே.பாலாஜி சூப்பரான திரைக்கதை அமைத்துள்ளார். அதனால் தான் சூர்யா கதை கேட்ட உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதில், கங்குவா படம்போல் தனக்கு அதிக பில்டப் இப்படத்தில் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே சூர்யா தன் ரூட்டை மாற்றி ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment