கண்ணப்பா கல்லா கட்டியதா.? முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Kannappa First Day Collection : புராண இதிகாசமான கண்ணப்பா கதையை தெலுங்கில் படமாக எடுத் நேற்று வெளியானது. விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய்குமார் என ஏகப்பட்ட தமிழ் திரை பிரபலமே நடித்த இந்த படம் பான் இந்தியா படமாக வெளியானது.

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாத வேடனாக இருக்கும் கண்ணப்பா சிவபெருமானின் தீவிர சீடராக மாறுகிறார்.

அதுவும் தனது கண்களை அம்பு வைத்து பிடுங்கி சிவனுக்கு காணிக்கை செலுத்தும் காட்சிகள் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. மேலும் கண்ணப்பாவாக நடித்த விஷ்ணு மஞ்சு சிறப்பாக நடித்துள்ளதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கண்ணப்பா படத்தின் முதல் நாள் கலெக்ஷன்

மேலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு வரும் நிலையில் வசூலும் நன்றாக அமைந்திருக்கிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 9 கோடி வசூலை பெற்றுள்ளது. இது நல்ல கலெக்ஷன் ஆகத்தான் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் அனைத்து மொழியிலும் வரவேற்பு பெற காரணம் எல்லா மொழியிலும் பரீட்சியமான நடிகர்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆகையால் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரவேற்பு பெறுகிறது.

கண்ணப்பா படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்க உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் பெற வாய்ப்பு இருக்கிறது.