கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.
மேலும் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காந்தாரா திரைப்படம் வெளிவந்தாலும், திரையரங்குகளிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல தியேட்டர்களில் பல மாநிலங்களில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ இயக்குனர் ரிஷப் ஷெட்டி மீது இந்திய சினிமாவே கவனத்தை திருப்பியுள்ளது. இதனால் காந்தாரா படம் கன்னடத்தில் வெற்றி பெற்று அந்த இயக்குனரை எதிர்பார்க்காத அளவிற்கு மற்ற மொழிகளில் விஸ்வரூப வெற்றி பெற்று வருகிறது.
இவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாக்ஸ் ஆபீஸ் கலக்கிய லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர், ரிஷப் செட்டியின் அடுத்த படத்தில் இணைவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அடுத்த படத்தில் பாலா தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் இணைகிறார். ரிஷப் ஷெட்டி உடன் பகத் பாசில் இணையும் காம்போ சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறது.
அத்துடன் இந்த படம் நிச்சயம் புதுவிதமான கதைகளத்துடன் காந்தாரப் படத்திற்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அத்துடன் இந்த படத்தில் யார் ஹீரோ படத்தின் பெயர் எப்போது படப்பிடிப்பு என்று கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.