எல்லா மொழிகளிலும் வெறித்தனமான வசூல் வேட்டையில் காந்தாரா.. பின்னுக்கு தள்ளப்பட்ட பிளாக்பஸ்டர்ஸ்

கன்னட மொழியில் வெளியான கே ஜி எஃப் படத்திற்கு எல்லா மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

காந்தரா படத்தை ரிஷாப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்தார். கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்த ஹேமபாலோ ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழிலும் டப் செய்து வெளியானது.

அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி இப்படம் தமிழில் வெளியாகி உள்ளது. காந்தாரா படத்தை தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கன்னட மொழியில் மிக விரைவிலேயே இந்த படம் 100 கோடி வசூலை எட்ட உள்ளது.

தங்களது நிலத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்ற கதைய அம்சத்துடன் பல படங்கள் வந்துள்ளது. ஆனால் அதையே சற்று வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ள படம்தான் காந்தாரா. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது.

சமீபத்தில் இந்திய சினிமாவின் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் பெற்ற படங்கள் வெளியாகி இருந்தது. தமிழில் சூர்யாவின் ஜெய் பீம் படம் 8. 9 ரேட்டிங் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் 8.4 ரேட்டிங்கை பெற்றிருந்தது. ஆனால் இந்த படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தற்போது காந்தாரா படம் 9.5 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்ற படம் என்ற சாதனையையும் காந்தாரா படம் பெற்றுள்ளது. மேலும் குறுகிய காலத்திலேயே காந்தாரா படம் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.