சின்ன கல்லு பெத்த லாபம், கம்மி பட்ஜெட்டில் பல கோடி லாபம் பார்த்த காந்தாரா.. 6 மடங்கு அள்ளிய தயாரிப்பாளர்

படத்தை பிரமாண்டமாக பெரிய பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. அதற்கு மாறாக கதையும், அந்தக் கதையை சொல்லும் விதமும் முக்கியம் என்பதை சமீபத்தில் வெளிவந்த கன்னட படமான காந்தாரா நிரூபித்திருக்கிறது.

ஏனென்றால் இந்த படத்தை தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை வெறும் 15 கோடிக்கு தயாரிப்பு 100 கோடிக்கு மேல் லாபத்தை பார்த்திருக்கிறது. நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்ட இந்த படம், கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலை எட்டிய நிலையில், மற்ற மாநிலங்களில் சுமார் 40 கொடியை பாக்ஸ் ஆபீஸில் குவித்திருக்கிறது.

இதுமட்டுமின்றி இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் 10 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது இவ்வாறு பட்ஜெட்டை விட ஆறு மடங்கு அதிக லாபத்தை பார்த்திருக்கிறது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்

ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்தான் கேஜிஎஃப் படத்தையும் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப் 2 படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு குறைவுதான். ஆனால் அந்த படம் உலக அளவில் பத்து மடங்கு அதிக லாபத்தை ஈட்டி 1000 வசூல் குவித்ததும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கன்னட படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீசை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இனிமேல் படத்தின் கதைக்கும் மற்றும் அதன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தெளிவான முடிவு உள்ளனர்.

மேலும் கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் காந்தாரா,  கேஜிஎஃப் போன்ற கன்னடப் படங்கள் இந்திய அளவில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, பிறமொழி படங்களுக்கு எல்லாம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

Leave a Comment