மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் முடிவுரும் நிலையில் கூட படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களின் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன் அடிப்படையில் பொன்னியின் செல்வன் வரும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த செய்தி தற்போது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் இப்படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அளவுக்கு இருக்கிறது. அதனாலேயே தியேட்டரில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் தற்போது ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக மற்றொரு வெற்றி திரைப்படமும் அதே நாளில் களம் இறங்க இருக்கிறது.
பிரபல கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி தயாரித்திருக்கும் காந்தாரா திரைப்படம் இப்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் 200 கோடியை தாண்டி வசூலிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் முதல் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தை பற்றி தான் வாய் ஓயாமல் பேசி வருகின்றனர்.
அதனால் இந்த படத்தை பார்ப்பதற்கும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அந்த வகையில் இப்படம் பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கும் அதே நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் ஒரே நாளில் மோதிய இந்த படங்கள் ஓடிடியிலும் மோத இருப்பது ரசிகர்களை ஆர்வம் கொள்ள வைத்துள்ளது.
மேலும் இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் வரவேற்பு பெற்றதை போன்று ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை எந்த திரைப்படங்களுக்கும் இப்படி ஒரு பலத்த எதிர்பார்ப்பு இருந்ததில்லை. அந்த அளவுக்கு இந்த இரு படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.