கர்ணன் படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் வெகுஜன மக்களை கவர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கர்ணன் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தனுஷுக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் லால் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் நடிகர் லாலுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க கர்ணன் படத்தில் நெகட்டிவ் கலந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். மிளகா, சதுரங்க வேட்டை, முத்துக்கு முத்தாக போன்ற பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
கர்ணன் படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத கொடூர அரக்கன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த நட்டியை திரையரங்குகளிலும் சமூக வலைதளங்களில் பலரும் திட்டி வருவதைப் பார்க்க முடிகிறது.

இதனால் வருத்தப்பட்ட நட்டி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானாக நடித்து தான் இருக்கிறேன் அது வெறும் நடிப்புப்பா எனவும், மேலும் போன் மெசேஜில் திட்டாதீர்கள் எனவும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
