சாதனை படைத்த கர்ணன் பட ஓவியம்.. தகவலை பகிர்ந்த தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கர்ணன். கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திலும் அவரது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதே போல், ஒவ்வொரு கதாபாத்திரமும், கர்ணன் வெற்றியின் மகுடத்திற்கு நவரத்தினங்கள் பொருந்தியது போல் பொருத்தமாக அமைந்திருந்தது. முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், கர்ணன் படத்தில் தனுஷ் காட்டு பேச்சி முன்பு அமர்ந்திருப்பது போன்ற ஓவியத்தை ஓவியர் சீவக வழுதி சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்டேப்லர் பின்னால் வரைந்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

மேலும், அதில் “புதிய புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இப்படைப்பை வரைந்து சாதனை புரிந்த சீவக வழுதிக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

இந்த ஓவியம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.