தமிழில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்காக பிரபல நடிகர் துடியாய் துடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் தெலுங்கு படங்களை தமிழ் நடிகர்கள் தொடர்ந்து ரீமேக் செய்து கொண்டிருந்த காலம் போய் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை தெலுங்கு நடிகர்கள் தேடித்தேடி ரீமேக் செய்து வரும் காலம் வந்துவிட்டது.
இவ்வளவு ஏன் இன்று தளபதி விஜய் முன்னணி நடிகராக வலம் வருவதற்கு அவர் பல தெலுங்கு பட ரீமேக்கில் நடித்தது தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே. ஆனால் சமீபகாலமாக தெலுங்கு நடிகர்களுக்கு தனுஷ் நடிக்கும் படங்கள் ஒரு விதமான ஆர்வத்தை தூண்டி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டடித்த அசுரன் படத்தை தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ரீமேக் செய்து வரும் நிலையில், அடுத்ததாக கர்ணன் படத்தை பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீ நிவாஸன் என்பவர் ரீமேக் செய்ய உள்ளாராம்.
இவர் ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தையும் ரீமேக் செய்தவர். அதுமட்டுமில்லாமல் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் அட்டகாசமான நடிப்பு க்கு முன்னால் இவரது நடிப்பு எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரிய அளவு எக்ஸ்பிரஷன் இல்லாத இவரது நடிப்பு கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பிற்கு ஈடு இணையாக இருக்குமா என இப்போதே பல கேள்விகள் எழுந்துள்ளன நிலையில், படம் வெளியாகி வெற்றி பெறவில்லை என்றால் அனைவருக்குமே சங்கடம் தான் என எச்சரித்து வருகிறார்களாம்.
