80-களில் எந்த ஒரு நடிகையிடமும் சிக்காத பிரபல நடிகர்.. ஜோடியாக்க ஆசைப்பட்ட ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். அப்போதெல்லாம் கார்த்தியின் படங்களுக்கு ஏராளமான வரவேற்புகள் இருக்கும்.

அதனால் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். அதுவும் கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து போக ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து இயக்குனர்களும் கார்த்தியை வைத்துதான் படங்கள் இயக்குவேன் என முடிவு செய்தனர். காரணம் அப்போது கார்த்திக்கிற்கு இருந்த வரவேற்பு மற்ற நடிகர்களுக்கு இல்லாமலிருந்தது.

பின்பு ஒரு சில படங்களின் தோல்வியால் கார்த்திக்கிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராமல் குறையத் தொடங்கின. அதனால் சினிமாவை விட்டு விலகினார். இருப்பினும் ஒரு சில இயக்குனர்கள் கார்த்திகை தனது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளனர். அதனால் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக்கிற்கு திரைத்துறையில் ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர். பல நடிகைகளும் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டு உள்ளனர். அந்த அளவிற்கு கார்த்திகை அனைத்து நடிகைகளுக்கும் பிடிக்கும். கார்த்திக் எந்த ஒரு நடிகை பின்னும் அலைந்ததில்லை. ஆனால் பல நடிகைகள் கார்த்திக்கு பின்பு அலைந்துள்ளனர்.

அந்த அளவிற்கு கார்த்திக்குடன் ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகளும் ஆசைபட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். தற்போது கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்தகன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.