அசால்ட் சேதுவையே மிஞ்சிய 2 கதாபாத்திரங்கள்.. மோச ஆட்டம் போடும் கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹீரோவை தாண்டி பாபி சிம்ஹாவின் அசால்ட் சேது கதாபாத்திரம் தான் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

சேதுவாக பாபி சிம்ஹா ரியாக்ஷனில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அதுமட்டுமின்றி ஜிகர்தண்டா படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருதும் வாங்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இறங்கி இருந்தார்.

அதன்படி கடந்த ஆண்டு ஜிகர்தண்டா 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடித்து வருகிறார். ஏற்கனவே இவருடைய கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. அந்த வகையில் லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ருத்ரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்போது முழு கவனமும் ஜிகர்தண்டா 2 படத்தின் மீது தான் உள்ளது. அசால்ட் சேதுவை மிஞ்சும் அளவிற்கு இரண்டு கதாபாத்திரங்களை கார்த்திக் சுப்புராஜ் மெருகேற்றி வருகிறாராம். அதாவது லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரின் கதாபாத்திரத்தையும் செதுக்கி வைத்துள்ளாராம்.

இவர்கள் இருவருக்குள் மோசமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறதாம். லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். இதனால் ஜிகர்தண்டா 2 நிச்சயம் வெற்றி என மோச ஆட்டம் போட்டு வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் ஆயிரம் ஜூனியர் நடிகர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குதிரைகள் வைத்து பிரம்மாண்ட காட்சியை படமாக்கி உள்ளார். படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் மட்டும மீதம் இருக்கிறதாம். ஆகையால் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை விரைந்து முடித்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது.