Kasthuri Raja : தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்குனராக பல படங்களை இயக்கியிருக்கிறார். இந்த சூழலில் ஆதிக் மீது உள்ள கோபத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி போன்ற படங்களை இயக்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் மீண்டும் அஜித்துடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் ஆதிக் குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் பாடல் பயன்படுத்து இருந்தார்.
இது குறித்து கஸ்தூரிராஜா பேசியிருக்கிறார். அதாவது மார்க் ஆண்டனி படத்தில் என்னுடைய எட்டுப்பட்டி ராசா படத்தில் இடம் பெற்ற பஞ்சுமிட்டாய் பாடலை பயன்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்போது குட் பேட் அக்லி படத்தில் நாட்டுப்புற பாட்டு படத்திலிருந்து ஒத்த ரூபாய் பாடலை பயன்படுத்தினார்.
ஆதிக் மீது கோபப்பட்ட கஸ்தூரி ராஜா
இது இரண்டிற்குமே என்னிடம் அனுமதி வாங்கவில்லை. முதல் முறை ஏதோ சரி என்று விட்டுவிட்டேன். ஆனால் மறுமுறையும் தன்னுடைய பாடலை பயன்படுத்திய போது அவருடன் பேச முயற்சித்தேன். ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை.
இப்போதுள்ள இளம் இயக்குனர்கள் எல்லாம் மரியாதையே கொடுப்பதில்லை. அவர் பெரிய ஆளா அவரிடம் போய் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கிறது. நானும் தேவையில்லாத பிரச்சனையை ஏன் உண்டாக்க வேண்டும் என்று எதுவும் பேசாமல் இருந்து விட்டேன்.
இப்போது வரை குட் பேட் அக்லி படத்தை நான் பார்க்கவில்லை. சமீபகாலமாக பழைய படத்தில் உள்ள பாடல்களை தான் தேடி தேடி போடுகிறார்கள். ஏன் புது பாட்டை பயன்படுத்துவதில்லை. மேலும் தன்னிடம் உங்கள் பாடலை பயன்படுத்தி விட்டேன் என்று ஒரு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம் என்று ஆதங்கம்பட்டு இருக்கிறார் கஸ்தூரி ராஜா.