மீண்டும் மார்க்கெட்டை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. இதுக்கெல்லாம் எந்த நடிகர் காரணம் தெரியுமா?

Keerthy Suresh In Upcoming movies: போட்டி நிறைந்த திரைஉலகில் கொஞ்சம் சரிந்தாலும் நம்மளை தாண்டி ஆயிரம் பேர் வந்து கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் கீர்த்தி சுரேஷ் நிலைமையும் ஆனது. தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினியின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்ததில் இருந்து கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதனால் ஹீரோயின் சான்ஸ் கம்மியாகிட்டே போனது.

இதனால் கொஞ்சம் தமிழ் சினிமாவிற்கு பிரேக் விட்டுட்டு வரலாம் என்று அக்கட தேசத்துக்கு போனார். அந்த வகையில் தெலுங்கு, மலையாளம் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் நடித்தார். இதில் இவருடைய கேரக்டர் கொஞ்சம் அதிரடியாக இருந்ததால் மக்களிடம் அதிக கவனத்தை பெற்றார்.

அடுத்ததாக கடந்த வருடம் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா சங்கர் படத்தில் நடித்தார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கீர்த்தி சுரேஷ்க்கு ஒரு நல்ல இமேஜை வாங்கி கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது டசன் கணக்கில் பட வாய்ப்பு இவரை தேடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட இவர் கைவசம் ஆறு படங்கள் இருக்கிறது.

Also read: ஒன்றிய அரசை மறைமுகமாக வெளுத்து வாங்கிய ரகு தாத்தா டீசர்.. கீர்த்தி சுரேஷ் ஆல் வெடிக்கும் புரட்சி

அதில் கேஜிஎப் மற்றும் சலார் படத்தை தயாரித்த ஹோம்பலே தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் முதல் காட்சியிலேயே இந்தி எழுத்தை அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் கே சந்துரு இயக்கத்தில் ரீட்டா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் “ரிவால்டர் ரீட்டா” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.

இதனை அடுத்து இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கத்தில் “கன்னிவெடி” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் “பேபி ஜான்” என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறார். இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக். அந்த வகையில் கண்டிப்பாக கீர்த்தி சுரேஷ்க்கு இது வெற்றி படமாக அமையும்.

ஜெயம் ரவி படத்தில் கீர்த்தி சுரேஷ்

அடுத்ததாக தெலுங்கில் ராம்பிரசாத் ரகு இயக்கத்தில் “இரண்டு ஜெல்ல சீதா” கதையில் காதல் ரொமான்டிக் படமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்பொழுது வந்த வாய்ப்பை எக்காரணத்தை கொண்டும் நழுவ விடக்கூடாது என்ற எண்ணத்தில் கீர்த்தி சுரேஷ் இருப்பதால் கண்டிப்பாக ஜெயம் ரவியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடுவார்.

சிரஞ்சீவியுடன் நடித்த போலோ சங்கர் தான் இந்த ரீ என்ட்ரிக்கு காரணம் என சொல்கிறது கோலிவுட் கோஷ்டிகள்.

Also read: ரஜினிக்கும் , சிரஞ்சீவிக்கும் மொத்தமா குழிதோண்டிய கீர்த்தி சுரேஷ் , தலையில் துண்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்