ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் கீர்த்தி சுரேஷ்.. என்னா ஸ்டைலு, என்னா லுக்கு.. வாவ்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் இந்த இரண்டு திரைப்படங்களும் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் நாய்க்குட்டிக்கு கட்டிபிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படத்தை வெளியிடுவது மற்றும் எந்த வெளி நாட்டிற்கு சென்றாலும் புகைப்படத்தினை எடுத்து அல்ப தனமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது போன்ற சேட்டைகளை செய்து வருகிறார்.

keerthy suresh
keerthy suresh

தற்போது மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடப்பதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரானா காரணமாக தற்போது துபாயில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இதற்காக கீர்த்தி சுரேஷ் விமானத்தில் துபாய்க்கு சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வேற எந்த நடிகையும் வெளிநாடு செல்லாதது போல இவர் மட்டும்தான் என்னமோ வெளிநாட்டிற்கு சென்றது போல் ஓவரா பில்டப் விடுகிறாரே என்று கூறிவருகின்றனர்.

மேலும் அவரது கமெண்ட் பாக்ஸில் அதென்ன பிளைட் உள்ள கண்ணாடி போட்டு இருக்கீங்க மற்றும் ஃபிளைட் குள்ள போஸ் பாத்தீங்களா, காசு பணம் வந்தா காக்கா கூட கலர் ஆயிடும் போன்ற வசனங்களை கமெண்ட் பாக்ஸில் கொட்டி வருகின்றனர்.