ஆர்த்தி அறிக்கைக்கு கெனிஷாவின் பதில்.. தீராத பஞ்சாயத்து

Ravi Mohan : ரவி மோகன் சமீபத்தில் ஐசரி மகள் திருமணத்தில் கெனிஷா உடன் வந்திருந்தார். இதில் இருவரும் ஒரே நிற ஆடையில் கையை கோர்த்து வந்தது பெரும் சர்ச்சையாக இருந்தது. அதேபோல் வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் ஆர்த்தி ரவி தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது தற்போதும் நான் ஆர்த்தி ரவி தான். எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எனது பிள்ளைகளுக்கு அவர் தான் அப்பா.

மேலும் நான் எப்பொழுதும் ஆர்த்தி ரவியாகத்தான் இருப்பேன். ரவி மோகனின் செயல்பாடு மிகவும் அதிர்ச்சி அளித்ததாக பதிவிட்டிருந்தார். இதற்கு கெனிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுக்கும்படி ஒரு பதிவு போட்டிருந்தார்.

ஆர்த்தி அறிக்கைக்கு கெனிஷாவின் பதில்

அதாவது ஆண்மையுள்ள ஆண்மகன் ஒருபோதும் எதன் மேலும் ஈர்க்கப்படும் மாட்டார். எங்கு அமைதியை உணர்கிறாரோ அந்தப் பெண்ணின் பக்கம் சாயப்படுகிறது. இது வலிமையுடன் போட்டி போடுவதல்ல ஒரு சமநிலை ஆனது.

இருவரும் ஒருவருக்கொருவர் சமநிலையை பூர்த்தி செய்து கொள்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். இதனால் ஆர்த்தி மற்றும் கெனிஷா இருவருக்கும் இணையத்தில் ஒரு கருத்து போரே நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஆர்த்திக்கு ரவியை பிரிய தற்போது வரை மனம் இல்லை. ஆனால் ரவி ஆர்த்தியை பிரிய உறுதியாக இருக்கிறார். ஆகையால் இந்த பஞ்சாயத்து தீராமல் போய்க்கொண்டே இருக்கிறது.