இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு கன்னட சினிமா வளர்ந்து வருகிறது. இன்று கன்னட சினிமா அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப் படுகிறது என்பதற்கு அடித்தளம் போட்டது என்னமோ கேஜிஎப் திரைப்படம் தான்.
பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி இருந்த கேஜிஎப் திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை ஆடியது.
யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முன்னதாக ஜூலை 16ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் எனக் கூறிய நிலையில் தற்போது மீண்டும் கொரானா பரவல் அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் என்ன செய்யப்போகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய பேவரைட் நடிகர் பற்றி மற்றவர்களிடம் கேட்டு அதனை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர் ஒருவர் கே ஜி எப் பட இயக்குனர் பிரசாந்த் நீலிடம் விஜய் பற்றி உங்களது கருத்து என்ன? எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ‘பவர்ஹவுஸ்’ என ஒற்றை வார்த்தையில் மாஸ் பதிலை கூறி மிரள விட்டுள்ளார் பிரசாந்த் நீல். சமீபகாலமாக விஜய்யின் படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அந்த வகையில் வருங்காலத்தில் விஜய் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் ஒரு படம் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம். இவர்கள் இருவரது கூட்டணியில் ஒரு படம் வந்தால் கண்டிப்பாக அது இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீசை பதம்பார்க்கும் என்பது மட்டும் உறுதி.
