KGF Yash: கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் முதலில் சீரியல்களில் ஹீரோவாக நடித்து அதன் பிறகு தான் படங்களில் நடிக்க துவங்கினார். அதிலும் இவர் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் தாறுமாறான வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்டது.
கன்னட நடிகராக இருந்தாலும் யாஷ் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனி மதிப்பு மரியாதை வைத்திருக்கிறார். அவருடைய ஸ்டைல், நடிப்பு அத்தனையுமே யாஷுக்கு அவ்வளவு பிடிக்கும். இதனால் ரஜினிக்காகவே தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டு, யாஷ் ஒரு செயல் செய்திருக்கிறார்.
கேஜிஎப் ஹீரோ யாஷ், பொதுவாக எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். 10 கோடி வரைக்கும் விளம்பரதாரர்கள் ஆஃபர் செய்தும் யாருக்காகவும் காசுக்காக எந்த விளம்பரத்தையும் செய்ய மாட்டார். ஆனால் அவரே இப்பொழுது மலேசியாவில் ஒரு பிரம்மாண்ட நகை கடை திறப்பு விழாவிற்கு வருகை தரவிருக்கிறார்.
ரஜினி நடித்த கபாலி படத்தை மிகப் பெரும் அளவில் மலேசியாவில் விநியோகம் செய்தவர்கள், தங்கக் கடை திறக்ககிறார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி அவர்கள் கடை திறப்பு விழாவிற்கு வருகை தருகிறார் யாஷ்.
இதற்கெல்லாம் காரணம் ரஜினி மீது கொண்ட அன்பு தான் என்கிறாராம். கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் மட்டும் நடிக்க மறுத்த யாஷ், முதல் முதலாக மலேசியாவில் உள்ள கடை திறப்பு விழாவிற்கு சென்று, ரஜினிக்காக தன்னுடைய கொள்கையை தளர்த்திக் கொண்டார்.
அதுமட்டுமின்றி இவர்கள் ரஜினிகாந்தின் கபாலி படத்தை மட்டுமல்ல கேஜிஎஃப் படத்தையும் மலேசியாவில் பெரிய அளவில் விநியோகம் செய்து யாஷுக்கும் உதவி செய்துள்ளார். அதற்கு நன்றி கடனாகவும் தான் யாஷ் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்படுகிறது.