கன்னட மொழியில் இந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் மற்றும் காந்தாரா படங்களை ஹோம்பேல் ஃபிலிம்ஸ். இந்நிறுவனம் இப்போது இந்திய சினிமாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 3000 கோடி முதலீடு செய்ய திட்டம் தீட்டி உள்ளதாம். கேஜிஎஃப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
இந்த படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் ரிஷப் செட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான காந்தாரா படம் எதிர்பார்க்காத அளவு மாபெரும் வெற்றியை கொடுத்து வசூலை வாரி குவித்தது.
இந்நிலையில் ஹோம்பேல் நிறுவனம் தற்போது கதை மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார்களாம். அந்த வகையில் அடுத்த ஆண்டு 2024 இல் பிரித்விராஜ் சுகுமாருடன் டைசன் படம் உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து ரக்ஷித் செட்டியுடன், ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சுதாகர் ஆகியோருடன்ஒரு திரைப்படம் தயாராக உள்ளதாம்.
சுதா கொங்காரா சமீபகாலமாக உண்மை கதை அல்லது பயோபிக் படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா இயக்கி வருகிறார்.
இப்போது ஹோம்பேல் பிலிம்ஸ் சுதா கொங்கராவுக்கு கிடைத்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என்பது சந்தேகம் இல்லை. இதைத்தொடர்ந்து இதே நிறுவனம் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதை கேட்டு கேஜிஎஃப் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது சலார் படத்தில் படு பிஸியாக உள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு கேஜிஎப் 3 படத்திற்கான வேலையில் இறங்க உள்ளார். இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு பின் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.