சரத்குமாரை ரிவென்ஞ் எடுத்த அஜித்.. காதல் சொதப்பியது எப்படி.?

Actor Ajith Kumar Untold Story: அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் அஜித், தான் காதலித்த பெண்ணை முன்னணி நடிகர் ஒருவர் காதல் என்று தொந்தரவு செய்த போது அவருக்கு அஜித் கொடுத்த ரிவெஞ் என்னவென்று தெரியுமா?

90களில்  தமிழ் சினிமாவில் வலம் வந்த முன்னணி நடிகை ஹீரா, அஜித்தின் வாழ்விலும் வலம் வந்தார். சங்கீத ஸ்வரங்கள் மம்மூட்டி போல் விடிய விடிய முழித்து கடிதம் எழுதும் அளவுக்கு இருவரும் பழகி வந்தனர்.

இந்நிலையில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமாருடன் தசரதன், முன் அறிவிப்பு, நம்ம அண்ணாச்சி போன்ற படங்களில் ஹீரா இணைந்து நெருக்கமாக நடித்ததின் மூலம் ஹீரா மீது சரத்குமார் காதல்வயபட்டதாக தகவல்கள் வந்தது. இதனை கண்டு கொள்ளாத அஜித் ஹீரோவுடன் காரில் சென்று படப்பிடிப்பு தளத்தில் சரத்குமார் முன்னாடியே ஹீராவை கொஞ்சி வெறுப்பேற்றி உள்ளாராம்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, சரத்குமாரை வெறுப்பேற்றியதுடன் ஹீராவையும் அவர் தொல்லையில் இருந்து காப்பாற்றியுள்ளார். இந்நிகழ்வினை மனதில் கொண்டு தான் தற்போது சரத்குமார் அவர்கள், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டு அஜித்தை வெறுப்பேற்றி வருகிறாராம்.

தலைக்கனம் அற்ற அஜித், தலைவர் பதவிக்கா ஆசைப்படுவார். இப்படி கொஞ்சிய காதல் கிளிகள் பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாகவும் ஹீராவின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் ஹீராவின் நடவடிக்கையில் மாற்றம் என்ற பல பல்வேறு காரணங்களால் அஜித் ஹீராவுடனான காதல் கைகூடவில்லை. கிளி பறந்து போயிட்டுது.

காதல் கோட்டையில் ஆரம்பித்த இவர்கள் காதல், தொடரும் படத்தோடு தொடராமலே போய்விட்டது. கடவுள் அமைத்து வைத்த மேடையில் அஜித் ஷாலினியுடன் இணைந்தது தேவன் எழுதிய கதை.