Kollywood Actor jeeva upcoming film and his net worth: “மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” என்று தமிழ் குடிமகன்களை குஷி படுத்திய நடிகர் ஜீவா “ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். கற்றது தமிழ், ராம், ஈ, நண்பன், ரௌத்திரம் பழகு, போன்ற படங்கள் இவரது நடிப்பு திறமைக்கு தீனி போட்டவையாக அமைந்தன.
இவரின் தந்தை தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் இன் நிறுவனர் ஆர்பி சவுத்ரி ஆவார். தந்தையின் மூலம் திரையுலகில் என்டர் ஆனாலும் தனது திறமை மற்றும் கடின உழைப்பை மேற்கொண்டு கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
விஜய் நடித்த ஜில்லா படத்தின் மூலம் தந்தை ஆர்பி சௌத்ரி அவர்கள் ஓய்வு பெறும் நோக்கோடு தன் பிள்ளைகள் நால்வருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையை பிரித்துக் கொடுத்ததின் மூலம் ஜீவா தயாரிப்பாளராக மாறினார்.
தற்போது ஆந்திராவில் மாபெரும் கட்சியின் தலைவரான ஒய் எஸ் ஆர் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை எடுக்கும் யாத்ரா படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் ஜீவா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
தனது படங்களுக்கு 5 கோடி வரை சம்பளமாக வாங்கும் ஜீவா சினிமாவை தவிர ஹோட்டல் துறையிலும் கால் பதித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார். தனக்கென சொகுசு பங்களா, கார் என வலம் வரும் இந்த ராஜா வீட்டு கன்று குட்டி காதலித்த பெண்ணான சுப்ரியாவை 2007 இல் கரம் பிடித்தார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக விளங்கும் ஜீவாவின் சொத்து மதிப்பு 95 கோடிக்கும் மேல். விரைவில் 100 கோடியே எட்டவிருக்கும் ஜீவா தனியே படங்களை தயாரிப்பதாகவும் மேலும் “சிவா மனசுல சக்தி” வெற்றி படம் கொடுத்த ராஜேஷ் உடன் விரைவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கூட்டு சேரவும் உள்ளார்.