அக்கட தேச திமிங்கலங்களுக்கு வலை வீசிய 3 இயக்குனர்கள்.. புஷ்பா 2 வசூலை மிஞ்சுமா அல்லு அர்ஜுன், அட்லி காம்போ

Allu Arjun-Atlee: இன்று அல்லு அர்ஜுன் தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் புது பட அறிவிப்பை வெளியிட்டது.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் இப்படம் பான் இந்தியா லெவலில் உருவாக உள்ளது. சயின்ஸ் பிக்சன் கதையான இப்படம் 2 பாகங்களாக வெளிவர உள்ளது.

கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட் ஒதுக்கி இருக்கும் சன் பிக்சர்ஸ் அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி சம்பளமும் அட்லிக்கு 100 கோடி சம்பளமும் பேசியிருக்கிறது.

அப்படிப் பார்த்தால் புஷ்பா 2 வசூலித்த 1800 கோடியை இப்படம் மிஞ்சும் என இப்போதே கருத்து கணிப்பும் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க கோலிவுட்டின் இன்னும் 2 இயக்குனர்கள் தெலுங்கு ஹீரோக்களுக்கு வலை வீசியுள்ளனர்.

புஷ்பா 2 வசூலை மிஞ்சுமா அல்லு அர்ஜுன், அட்லி காம்போ

அதன்படி லோகேஷ் கனகராஜ் பிரபாஸை வைத்து பான் இந்தியா படத்தை எடுக்க இருக்கிறார். இதுவும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதை தான்.

அதேபோல் நெல்சன், ஜூனியர் என்டிஆர் கூட்டணியும் இணைய உள்ளனர். ஜெயிலர் 2 முடிந்தவுடன் இப்படம் தொடங்க இருக்கிறது.

இப்படியாக கோலிவுட்டின் டாப் 3 இயக்குனர்கள் தெலுங்கு ஹீரோக்களை வசப்படுத்தி இருக்கின்றனர். பார்க்கலாம் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்று.